மக்களில் எமக்கு வேறுபாடு இல்லை-இராணுவத் தளபதி

வடக்கு தமிழ் மக்களானாலும், தெற்கு சிங்கள மக்களானாலும், இராணுவம் மக்களின் இராணுவம், எமக்கு வேறுபாடு கிடையாது.

சரியானதை சரியான நேரத்தில் செய்வோம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை இன்று மட்டுமல்ல நாளையும் நடக்கும் நாளை மறுதினமும் நடக்கும். கடந்தகால சம்பவங்களின் பின்னர் நாம் புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் சந்தேக நபர்கள் இருப்பார்களே ஆனால் அவர்களை கைது செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.எந்த நாட்டிலும் நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பு சரியாக அமைந்துள்ளது என்று கூறிவிட முடியாது.உலகளாவிய ரீதியில் செயற்படும் குழுக்கள் இருக்கின்றன.எனவே கொஞ்சத்தூரம் நாம் தேடிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் இல்லாதபோதும் நாம் எமது பலத்தினை முழுமையாக பயன்படுத்துவோம். இராணுவம் என்பது மக்களின் இராணுவம். வடக்கு தமிழ் மக்களாக இருக்கலாம் அல்லது தெற்கு சிங்கள மக்களாக இருக்கலாம் அனைவருக்கும் பொதுவானது எமது இராணுவம். மக்களின் குறை நிறைகளை கண்டு நாம் உதவி புரிவோம். சில குழுக்கள் அது அரசியல் குழுக்கள் அல்லது வேறு அமைப்புக்களின் நோக்கங்களுக்கு எடுபடவேண்டிய தேவை எமக்கு இல்லை.நாம் சரியானதை சரியான நேரத்தில் செய்வோம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!