இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி!

இலங்கையில் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் மூலோபாயங்களுக்காக, ஐரோப்பிய ஒன்றியம் 8.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.

இந்த மாதம் முற்பகுதியில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரதித்தலைவர் பெற்றிக்கா மொகறினிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் உடன்பட்ட விடயத்திற்கு அமைவாக இந்த நிதியினை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தினை நிலைநாட்டல், சமாதானத்தினை ஏற்படுத்தல், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வினை மீளக்கட்டி எழுப்புதல், விசேடமாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரிதல் போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த நிதி உதவி வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!