நுவரெலியாவில் மரப்பலகை விற்பனை நிலையத்தில் தீ!

நுவரெலியா ஹட்டன் கொட்டகலை பிரதான வீதியின் குடாகம பகுதியில் உள்ள மரப்பலகை விற்பனை நிலையமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விற்பனை நிலையம் தீ பற்றியதில், ஜந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரப்பலகைகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு, ஒரு தொகைப் பணமும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த மரப்பலகை நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிக்கலாம் எனவும், களஞ்சியப்படுத்தப்பட்ட மரப்பலகைக்கு மண்ணென்னை ஊற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!