பளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநாச்சி – பளை பகுதியில் 8 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி அம்மன் கோயில் பகுதியில் வைத்து 8 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் 36 வயதுடைய உடுத்துறை பகுதியினை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கஞ்சாவை வேறு ஒரு நபருக்கு பரிமாற்றம் செய்வதற்காக எடுத்துவந்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!