முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூஸிலாந்து 249 ஓட்டங்கள்

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

நேற்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி நேற்றைய இன்னிங்ஸின் முதலாம் நாள் முடிவின்போது நியூஸிலாந்து அணி 68 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ரோஸ் டெய்லர் 86 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் 204 ஓட்டத்துடன் தனது இன்றைய இரண்டாம் நாளின் போது தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி சற்று முன்னர் 83.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் அகில தனஞ்சய 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!