மலையகத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை!

இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒருவார காலமாக இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக 18 வீடுகள் முழுமையாகவும் 292 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!