பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு!

சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்ற மற்றுமொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ 357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியில் புதிய கோள்களை தேடுவதற்காக அனுப்பிய விண்வெளி தொலைநோக்கி இந்த புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.

நட்சத்திரங்களை கிரகங்கள் கடந்து செல்லும்போது அவற்றின் பிரகாசமானது சற்று மங்கக்கூடும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு நட்சத்திரங்களின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து புதிய கிரகங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் GJ 357 என்ற கிரகம் உள்ளமை உலகுக்கு தெரியவந்துள்ளது.

GJ 357 என்ற கிரகம் மனிதன் வசிக்கத் தகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூமியை விட 6.1 மடங்கு அதிக எடை கொண்ட இந்த கிரகம் 55.7 நாட்களுக்கு ஒருமுறை தனது நட்சத்திரத்தை சுற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!