வவுனியா சாந்தசோலை சந்திக்கருகாமையில், முதிரை மர குற்றிகளை ஏற்றிசென்றபோது விபத்திற்குள்ளாகி நின்ற கப் ரக வாகனம் ஒன்று இன்றயதினம் அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோத முதிரை மரங்களுடன் சென்றுகொண்டிருந்தபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளநிலையில், குறித்த வாகனம் முதிரை குற்றிகளுடன் தனிமையில் நின்றுள்ளது.
யாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அனுமதி இன்றி கடத்தபட்ட மரங்களையும், வகனத்தையும் மீட்டுள்ளனர்.(நி)