வேட்பாளர்கள் தொடர்பில் சட்ட உருவாக்கம் அவசியம்: பெஃப்ரல்

பொதுத்தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தொடர்பில் சட்ட உருவாக்கம் ஒன்றை பெஃப்ரல் அமைப்பு கோரியுள்ளது.
அடுத்துவரவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தொடர்பான சட்ட ஊருவாக்கமொன்றை கொண்டுவர வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என தேர்தலை கண்காணிக்கும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் தமது தொகுதியில் வெற்றி பெறுவதற்காக 40 கோடி ரூபாயை செலவிட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக சிறந்த பிரஜைகள் தெரிவு செய்யப்படாது செல்வந்தர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே ,தனை தடுப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்ட உருவாக்கம் அவசியம் என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!