யாரும் பார்க்கவில்லை என நினைத்து திருடியவர் சீ.சீ.ரி.வி கமெராவில் பிடிபட்டார்!

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹட்டன் மல்லியப்பு பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்ட சிறிய ரக லொறியை திருடிய சந்தேக நபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர், சீ.சீ.ரி.வி கமெராவின் உதவியுடன், ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்றையதினம் காலை வேளையில், சந்தேக நபர் வானின் கதவை திறக்க முற்பட்ட போது, அது திறக்க முடியாத நிலையில், அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியை தள்ளிக்கொண்டு போகும் காட்சி, வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில், லொறியின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டுக்கமைய, சீ.சீ.ரி.வி கமெராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட லொறியை மீட்டதுடன், ஸ்டெதன் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யபட்ட சந்தேக நபர், நாளையதினம் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!