கல்முனை, பட்டிருப்பில் திருட்டு : இருவர் கைது

அம்பாறை கல்முனை பாண்டிருப்பில் பெண்னொருவரிடமிருந்து பட்டப்பகலில் தங்க சங்கிலி இரண்டினை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவரை மட்டக்களப்பு ஓட்டமாவடியில் வைத்து நேற்று கல்முனை பொலீசார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பாண்டிருப்பில் தனது வீட்டிற்கு முன்னால் நின்று பாதையைக் கடந்து சென்ற பெண் ஒருவரிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த 12ஆம் திகதி மு.ப.11.00 மணியளவில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் இதன்போது அங்கு குழுமிய மக்கள் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அறிவித்துள்ளனர் அங்கு வந்த பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வீ. கமராக்கள் ஊடாக கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன் பின்னர் விசாரணைகளை முடுக்கி விட்ட பொலீசார் அதன் உரிமையாளரான மருதமுனையில் வசிக்கும் தச்சு வேலை செய்யும் ஒருவரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிள் தனதென்றும் அதனை தம்மிடம் வேலை செய்யும் இருவர் பகல் உணவு எடுத்து வருதவற்காக எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளதுடன் அவர்களின் விபரங்களையும் பொலிசாருக்கு வழங்கியுள்ளார் அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார் சம்பந்தப்பட்டவர்களை வாழைச்சேனை ஓட்டமாவடியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு இன்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச்சங்கிலிகளையும் கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மொகமட் யூசுப் மொகமட் பைறூஸ் மற்றும் அப்துல் சலாம் மொகமட் அஸீம் ஆகியோராவார்கள் கல்முனை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பீ;.ஹரதின் அறிவுறுத்தலின் கீழ் கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!