புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், மற்றொரு குப்பை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்துடன், பின்புறமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதற்காக, இன்று அதிகாலை கொழும்பில் இருந்து புறப்பட்ட டிப்பர் வாகனம் விபத்திற்குள்ளானதுடன், விபத்திற்குள்ளான டிப்பர் வாகனத்தின் முன் பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், விபத்திற்குள்ளான டிப்பர் வாகனத்தில் இருந்து, குப்பைகளை வேறு டிப்பர் வாகனத்திற்கு மாற்றி, அருவக்காட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், விபத்திற்குள்ளான வாகனத்தில் இருந்த குப்பைளை, வேறு இரு டிப்பர் வாகனத்தில் ஏற்றி, அருவக்காட்டுக்கு அனுப்பி வைத்தனர். (007)