நாட்டில் சாந்தி சமாதானம் மலர வேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போக வேண்டியும் மழை வேண்டியும் நாட்டில் சாந்தி சமாதானம் மலரவேண்டியும் தீயசக்திகள் ஒழிந்து போகவேண்டியும் மழைவேண்டியும் அம்பாறை மாவட்ட தம்பிலுவில் காயத்ரி தபோவனத்தில் பூரணை தினமான இன்று விசேட யாகபூஜைகளும் காயத்ரி அம்மன் பக்தி இறுவட்டு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் காயத்ரி தபோவன முகாமையாளர் காயத்ரி உபாசகர் அ.கந்தராஜா தலைமையில் இன்று காயத்ரி தபோவன பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது.
முதலில் காயத்ரி மகாயாகம் காயத்ரி உபாசகர் சிவபாலசுந்தரத்தால் மகாயாகம் செய்யப்பட்டதுடன் பக்தர்கள் அக்கினி ஹோமத்தில் ஆகூதிகள் கொடுத்து காயத்ரி மந்திரங்களை உச்சரித்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் இரா.தெய்வராஜனின் 21ஆவது வெளியீடான காயத்ரி அம்மன் பக்தி இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இவ் வெளியீட்டினை திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு வைபவ ரீதியாக வெளியீட்டு வைத்திருந்ததுடன் ஆலய, பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். (007)