நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில், நீரோடையில் இருந்து, ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம், இன்று அன்று காலை மீட்கப்பட்டதாக, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக, பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மரண விசாரணைகளின் பின்னர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை, மஸ்கெலியா பொலிஸாரும், ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!