எதிர்வரும் 30ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் !

எதிர்வரும் 30 ஆம் திகதி, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு பகுதிகளில், பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று, முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி இவ்வாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 890 ஆவது நாளாக தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்று வடக்கில் உறவுகளை கையளித்த இடமான ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும்,மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம். இந்த போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

ஜனாதிபதி வேட்டபாளாராக முன்வந்துள்ள கோட்டாபய எங்களுக்கு குற்றமிளைத்தவர், அவரிடம் தான் எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம் முல்லைத்தீவு, வட்டுவாகல், செல்வபுரம், ஓமந்தை என பல முகாம்களில் எம உறவுகளை கையளித்தோம். அவரும் சேர்ந்துதான் எங்கள் உறவுகளை கடத்தினார், அவாரால் தான் எமது உறவுகள் கொல்லப்பட்டார்கள,; அவரால்தான் எமது உறவுகள் இன்றும் அரசியல்கைதிகளாக இருக்கின்றார்கள்.

அவர் தன்னுடைய குற்றத்தினை மறைப்பதற்காக மீண்டும் ஒரு நாடகத்தை மேடை ஏறுகின்றார் எங்களுக்கு அரசிலே நம்பிக்கை இல்லை. அவர் வந்தாலும் என்ன பதில் தருவார் என்று எங்களுக்கு தெரியும்.

எங்கள் உறவுகளை விடுதலை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் உறவுகளை இப்போதும் மறைத்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்; தமிழினத்தை அழிப்பதற்காக பாரிய சதி ஒன்றினை மேற்கொள்ளவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

எனவே யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!