எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் கண்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை அங்கு சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கட்டுக்கலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் சந்திக்கும் இதேவேளை பல கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் ஏற்பாட்டில் இன்ற கூட்டங்கள் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெகலிய ரம்புக்வெல, பந்துல குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.