இலங்கையின் அதிகாரப்பகிர்வு நடைமுறைக்கு பொருத்தமானதாக, காஸ்மீர் நிலவரத்தை மேற்கோள் காட்டி, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றமை, தன்னை குழப்பமும் கவலையும் அடைய செய்திருப்பதாக, தமிழகத்தின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் தலைவருமான அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு, சம்பத் அனுப்பிய திறந்த மடலில் இந்த கருத்து குறிப்பிடப்படுகின்றது.
கஷ்மீரில் நிகழ்;ந்திருக்கின்ற இந்த விடயம், பண்பாட்டு பாரம்பரிம் பாதுகாக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது.
பாராதத்தின் வட பாகத்தில், திபெத்தில் காணப்படும் கைலாச மலையில் இருந்து பாரதத்தின் ஊடாக, தெற்கில் இலங்கையின் கதிர்காமம் வரையும், அத்துடன் மேற்கில் சிந்து நதிக்கும், கிழக்கில் ஐராவதி நதிக்கும் இடையில் பரந்து விரிந்து காணப்படும் பண்பாட்டு பாரம்பரியம், நரேந்திர மோடியின் காஸ்மீர் நடவடிக்கை மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வளர்த்தெடுக்கப்படுகின்ற, விழுமியங்கள் ஒழுக்கங்கள், அறம் மற்றும் கலாசார பண்பாடுகள் பேணிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு, காஸ்மீர் மாற்றம் ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது.
காஸ்மீர் மக்களிடம் காணப்பட்ட நிர்வாக அதிகாரப்பகிர்வை பலவீனப்படுத்துவதாகவோ, காஸ்மீர் மக்களிடம் காணப்படும் நிர்வாக அதிகாரப்பகிர்வை மத்தியில் குவிப்பதாகவோ, நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை அமையவில்லை.
மாறாக காஸ்மீர் மக்கள், அரசியல் ரீதியாக இப்போது பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
லடாக் பிராந்தியத்தை ஜம்மு – காஸ்மீர் பிராந்தியத்தில் இருந்து பிரித்து, தனி பிராந்தியமாக மத்திய அரசின் கீழ் கொண்டுவந்ததன் மூலம், லடாக் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
மோடியின் காஸ்மீர் நடவடிக்கை தொடர்பில், இலங்கை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது.
ஜம்மு – காஸ்மீர் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் பிராந்தியத்தில், பௌத்தர்கள் வாழ அனுமதிக்கப்பட்டது போல, தமது பாரம்பரிய வாழ்விடங்கள் அமைந்துள்ள நிலத்தில், இலங்கையில் இந்துக்களுக்கான பாதுகாப்பான நிர்வாக பிராந்தியத்தை வளங்குவவதன மூலம், இலங்கையின் எதிர்கால வளர்ச்சியை மையப்படுத்தி இருக்கின்ற அரசியல் பிரச்சினைக்கு, இலங்கை தீர்வைக் காண முடியும் என்பதே, இலங்கை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்து பெரும்பான்மை மக்களுக்கான ஒரு நிர்வாகப் பிராந்தியமும், பௌத்த பெரும்பான்மை மக்களுக்கான ஒரு நிர்வாகப் பிராந்தியமும், சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் தர்ம தத்துவமும், தம்ம தத்துவமும் போல ஒருமித்து வாழ முடியும்.
உலகமெங்கும் அகதி முகாம்களில் வாழுகின்ற இலங்கை இந்துக்களை, இலங்கையின் இந்து பிராந்தியத்தில் மீள்குடியேற்றம் செய்வதன் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாக பின்பற்ற முடியும்.
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் ஆட்சி முறைமையில், தென் ஆசியர்கள் பரம்பரை பரம்பரையாக வளர்த்தெடுத்த விழுமியங்களையும் அறங்களையும், மீள் எழுச்சி கொள்ளும் வகையில், அவரின் காஸ்மீர் நடவடிக்கை அமைந்திருக்கிறது என்று, உங்களுக்கு கூறுவதில் பெருமையும் திருப்தியும் அடைகிறேன்.
என தமிழகத்தின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் தலைவருமான அர்ஜீன் சம்பத் குறிப்பிட்டுள்ளார். (மு)