நல்லூர் ஆலயத்தினதும் அடியவர்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்வது எமது கடமை – மகேஸ் சேனாநாயக்க

நல்லூர் ஆலயத்தினதும் தரிசிக்க வரும் அடியவர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கு இருக்கின்றது அதற்கு அமையவே பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலயச் சூழலில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், பாராளுமன்றத்தில் உரையாற்றியமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவம் நடைபெறுகின்றதால் ஆலயத்திற்கு வருகின்றவர்களினதும் ஆலயத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு இருப்பதால்தான் நாங்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றோம்.

பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அதற்கமைய தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உதவி செய்வதற்குமே தான். அதைவிடுத்து மக்களுக்கு அசௌகரியத்தை அல்லது இடைஞ்சலைக் கொடுப்பதற்காக அல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் துரதிஸ்ரவசமாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சம்பவத்தால் தான் இப்படியான பாதுகாப்புக்களை அதிகமாக்க வேண்டியுள்ளது. அதற்கமையவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. ஆகையினால் கோவிலுக்கு வருபவர்கள் தமது வேண்டுதல்களை நிறைவேற்றி இடைஞ்சல்கள் ஏற்படாத வகையில் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்பது தான் எங்களது நோக்கமாகும்.
இங்கு இரர்னுவம் மற்றும் பொலிஸார்; கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் பாதுகாப்பு சம்மந்தமான அச்சுறுத்தல் ஏதும் ஏற்படவில்லை. இந்த மாதம் முடியும் போது அதிகமான சனக் கூட்டம் இங்கு ஒன்று கூடவுள்ளனர். அதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவையும் பொறுப்பும்; கடைமையும் உள்ளது.
இதனால் தான் தற்போது இரானுவமும் பொலிசும் விசேட கடமையில் ஈடுபட்டள்ளது. எந்தவொரு வேண்டத்தகாத சம்பவங்களும் நடக்காததை உறுபதிப்பதுடுத்துவது தான் எமது நோக்கமும் கடமையுமாகும். குறிப்பாக கடந்த காலத்தில் சில வேண்டத்தகாத சம்பவம் நடந்துள்ளது. அதனால் பாதுகாப்பு சந்ம்மந்தமாக கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டியிருக்கின்றது.

அந்தச் சம்பவங்கள் என்பது ஒரு நீண்டகால திட்டம். அதே நேரம் அச் சம்பவங்கள் என்பது பைத்தியக்காரனின் வேலையாகவும் இருக்கலாம். அதிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அப்படி ஒரு சில தரப்பினர்கள் தனியாகவும் குழுவாகவும் அல்லது பைத்தியக் காரனும் செய்யலாம். அதிலிருந்து நாட்டைப் பாதுகாத்து மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் நல்லூர் ஆலயத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!