வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வீதிக்கு வந்த வெள்ளைநாகம்

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால், அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றயதினம் காலை இடம்பெற்றுள்ளது.

இன்று காலை தாண்டிக்குளத்திலுள்ள தனியார் உணவகமொன்றிற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது. வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

இந்தநிலையில் குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒழிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுத்து விடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லபட்டு அங்கு நின்ற ஒருவர், மோட்டார் சைக்கிளிற்குள் இருந்த நாகபாம்பினை பிடித்து பாதுகாப்பாக ஆலய பகுதியில் விட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!