எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுடன் கைகோர்த்து, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதில், முஸ்லிம் மக்களும் பங்காளிகள் ஆகவேண்டும் என, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் மொஸம்மில் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களில் அதிகளவானோர் கோட்டபாய ராஜபக்ச மீது விருப்பம் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையில் முஸ்லீம் மக்களிடம் விசேட வேண்டுகோளை விடுகின்றேன். 2005 தேர்தலில் பள்ளிகளில் அசாம் கூற விடமாட்டார்கள் என்று பொய் கூறி முஸ்லீம் மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியினர் கொள்ளையிட்டார்கள். 2015 தேர்தலிலும் அதே பாணியில் வாக்குகளை சுருட்டிக் கொண்டார்கள். எனவே இது போன்ற பொய்யான பிரச்சாரங்களுக்கு செவிசாய்;க்காது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கின்ற விரும்புகின்ற ஒருவருடன் இணைவதன் ஊடாகத்தான் நல்லிணகத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம் மக்கள் அனைவரும் கோட்டபாய ராஜபக்சவுடன் கைகோர்த்து இந்த நாட்டில் சாந்தி சமாதானம் நல்லிணக்கம் அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்துவதில் பங்காளிகளாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம் (மு)