முல்லை : செஞ்சோலை வளாகத்தில் குண்டுத் தாக்குதலில், உயிரிழந்தோருக்கு அஞ்சலி.

முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில், உயிரிழந்தோரின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதற்கமைய, தாக்குதல் இடம்பெற்ற காலை 07.05 மணிக்கு, கொல்லப்பட்ட உறவுகள், முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் நினைவுகூரப்பட்டனர்.


அஞ்சலி நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த நேரத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், தமது உறவுகளை பறிகொடுத்த உறவினர்கள், பொதுமக்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!