பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக 4 தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கும் கடிதம், ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
இக்கடிதத்தில், நான்கு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதில் பொருத்தமான ஒரு தினத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகின்றது. எதிர்வரும் 20, 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ஒரு தினத்தை தெரிவு செய்து அறிவிக்குமாறும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதிலைப் பொறுத்து தெரிவுக் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையவுள்ளதாகவும், ஜனாதிபதி சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு தெரிவுக்குழுவை அழைத்தால் அங்கு சென்று செயற்படவும் தாம் தயாராகவுள்ளதாகவும், தெரிவுக்குழு பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தெரிவுக் குழுவில் கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது (மு)