நாட்டில் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து நீடிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும்  ளுத்துறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!