நுவரெலியா நாவலப்பிட்டியில் மண்சரிவு அபாயம், 75 பேர் இடம்பெயர்வு

நுவரெலியா நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடரும் மழை காரணமாக குறித்த பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் கெட்டப்புலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை தோட்ட அதிகாரிகளும், பிரதேச செயலர்களும் இணைந்துமேற்கொண்டுள்ளனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!