மன்னார் – மடு திருத்தலத்தின் நவ நாள் திருப்பலியில், நேற்றிரவு மெழுகு திரி பவனி இடம்பெற்றது.
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற நவ நாள் திருப்பலியை தொடர்ந்து, நேற்று இரவு மடு திருத்தலத்தில் மெழுகு திரி பவனி இடம்பெற்றது. குறித்த பவனியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாளை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இலங்கை கத்தோழிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை பங்கேற்க, மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவனியும், ஆசிரும் இடம்பெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்படுகள் காணப்படுகின்ற போதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மு)