அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை
வெளிநாட்டு பிரதிநிதிகள், மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள், உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக தாக்குதலுக்குள்ளான குறித்த வீட்டை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் சென்று தொடர்ச்சியாக பார்வையிட்டு வருவதோடு, அதனை
கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்புத் தரப்பினர் காண்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும். குறித்த வீட்டை புனரமைத்து கொடுப்பதற்காகவே அது பார்வையிடப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். (மு)