திருகோணமலை – பாலதிபுரம் சந்தியில் விபத்து. இளைஞன் பலி.

திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலதிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர்

உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் தோப்பூர் ஜின்னாகரைச் சேர்ந்த 18 வயதுடைய நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப் பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில்

மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!