இந்தியா கேரள மாநிலத்தில் கனமழை, 92 பேர் பலி.

இந்தியா கேரளாவில் கடந்த வருடம் போன்று கனமழை பெய்து வருகின்றது. கேரளாவில் கடந்த ஆண்டு கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2.26 இலட்சம் மக்கள் ஆயிரத்து 239 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!