பிரதமர் ரணில், நாளை வடக்குக்கு விஜயம்

நாளை, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.


வவுனியா பொது வைத்தியசாலையில், இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை, மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கவுள்ளார்.

இதன் போது, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள, இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, நெதர்லாந்து துணை தூதுவர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை மறுதினம், யாழ்ப்பாணத்திலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேவேளை, பிரதமரின் வருகையை முன்னிட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், பணியாளர்களின் தகவல்கள் பெறும் நடவடிக்கையை, சிவில் உடை தரித்த பொலிஸார்; மேற்கொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!