சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க கோரிக்கை!

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, இலங்கை நாட்டுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்ததை முன்னிட்டு, தொடர்ந்தும் இலங்கைக்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தி, கடந்த 6 ஆம் திகதி, கிளிநொச்சி பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டி பயணம், இன்று நுவரெலியா நாவலபிட்டி நகரை அடைந்துள்ளது.


கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மிதிவண்டி பயணம், அனுராதபுரம் ஊடாக, கண்டி வழியாக, நாவலபிட்டி நகரை அடைந்தது.

இந்த மிதிவண்டி பயணத்தை, 20 வயதுடைய யசித் வீரதுங்க. சமிந்து ஆதித்ய ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இன்று, கித்துள்கலை பகுதியில் தங்கியிருந்து, நாளையதினம் அவிசாவளை ஊடாக, இரத்தினபுரி வழியாக, எம்பிலிபிட்டி பகுதிக்கு சென்று, தெவுந்தரதுரு பகுதிக்கு செல்லும் இருவரின் மிதிவண்டி பயணம், எதிர்வரும் 16 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!