வவுனியாவில், தொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு

வவுனியாவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு, தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது.


இலங்கை மத்திய வங்கியும் வடக்கு கிழக்கு மாகாண தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த செயலமர்வில், வரவேற்புரையை கார்த்திகா மற்றும் சுபாஸ்சிங்கம் மேற்கொண்டனர்.

விரிவுரை தொடக்கத்தை, நிதி மற்றும் சந்தைப்படுத்தல், முகாமைத்துவம் வளவாளர்களாக, தொழில்நுட்பவியல் கல்லூரி பார்த்தீபனும், தொழில்நுட்ப சந்தைப்படுத்தல் விரிவாக்கம் சரணியன், தொடர்பாடல் விரிவுரையை ஜனஸ்டின் ஆகியோரும் மேற்கொண்டனர்.

இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்ற செயலமர்வில், வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், தொழில்நுட்ப முயற்சியாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கி பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!