வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக என்.பி.வெலிகள இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் 11.06 சுப நேரத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட, களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெலிகள, வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாவார்.

கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி என்.பி.வெலிகள சமயத் தலைவர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!