பெண்கள் நலவாழ்வு செயற்றிட்ட வரைபு வெளியீடு

சுகாதார அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான மக்கள் தொகை நிதியம் என்பன இணைந்து இலங்கை பெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்திற்கான திட்ட வரைபை வெளியிட்டுள்ளன.

சுகாதார அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான மக்கள் தொகை நிதியம் என்பன இணைந்து இலங்கை பெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்திற்கான திட்ட வரைபை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த வரைபில் பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, கருப்பைக் கழுத்து புற்றுநோய் இலங்கை பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளில் மூன்றாவது பெரிய வகையாகும் எனவும், இது இனவிருத்தி சுகாதாரம் குறித்த முக்கியமான ஒரு பிரச்சனையாகும் எனவும் குறித்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில், 2018ஆம் ஆண்டு மாத்திரம் 1136 புதிய கருப்பைக் கழுத்து புற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பாலியல் நடவடிக்கைகள் வழியாக கடத்தப்படும் தொற்றக்கூடிய ஹியூமன் பப்பிலாமோ வைரஸ் இதற்கான முக்கிய காரணமாகும்.
இலங்கை பெண்கள், நல்வாழ்வு கிளினிக்குகளில் பரிசோதிக்கப்படும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். குருதியமுக்கம், போஷாக்கு, நீரிழிவு, மார்பகம் தொடர்பான பிரச்சனைகள், கருப்பை கழுத்து, குடும்பத்திட்டமிடல் நிலைமை, மாதவிடாய் பிரச்சனைகள், இனவிருத்தி தடத்தில் ஏற்படும் பிரச்சனைகள், மோனோபோஸ் தொடர்பான பிரச்சனைகள் ஆகியனவும் அச்சோதனையில் அடங்கும்.

தற்போது இலங்கை மற்றும் உலக நாடுகளில் வளங்களும், கவனமும், இரண்டாம் நிலை நோய்த்தடுப்பை விட குணமாக்கலையே நோக்கமாக கொண்டே உபயோகிக்கப்படுகின்றன.
இந்த நிலைமையானது பெண்ணின் வாழ்க்கைத்தரத்தை அல்லது அவரின் இனவிருத்தி சுகாதாரத்தை பாதிக்கின்றன.

ஆகவே பெண்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் இறப்பு வீதத்தை குறைக்க வேண்டியதே அவசியமானது. எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து இலங்கை சுகாதார அமைச்சானது, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன், இலங்கை பெண்கள் நலவாழ்வு தேசிய செயற்றிட்ட வரைபை வெளியிட்டுள்ளது.

இது 2030ஆம் ஆண்டளவில் மிகவும் பின்தங்கியுள்ள பெண்கள் அடங்கலாக, அனைத்து வயதுமட்ட பெண்களும் நாடு முழுதும் உள்ள பெண்கள் நலவாழ்வு மையங்களின் வழியாக தரமான சுகாதார சேவைகளை பெறுதலை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!