தமிழ்ப் பழமொழி அகராதி வெளியீடு

தமிழ்ப்பழமொழிகளின் அகராதி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால், தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் நூல் மீள் பதிப்பு செய்யப்பட்டு, நேற்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

பீற்றர் பேர்சிவல் பாதிரியார் 1843 மற்றும் 1874 ஆண்டுகளில் தமிழ்ப் பழமொழிகளை தொகுத்து, தொகுப்பாக வழங்கியிருந்தார்.

குறித்த பழமொழி தொகுப்பு விருபா குமரேன் மற்றும் அ.சிவஞானசீலன் ஆகியோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு, தமிழ்ப் பழமொழிகள் அகராதி தொகுப்பாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்; திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கேட்போர் கூடத்தில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜிபா சிவதாஸ் தலைமையில் இவ் பழமொழி அகராதி வெளியிட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந் பழமொழி அகராதி தொகுப்பின் வெளியிட்டு நிகழ்வில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்,கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான செயலாளர் இ.இளங்கோவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி மற்றும் ஹாட்லிக் கல்லூரி அதிபர் த.முகுந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்தோடு, பருத்தித்துறை நகரபிதா, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்; திணைக்கள அதிகாரிகள், வடமராட்சிபிரதேச கல்வியலாளர்கள், ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!